ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.5000 லஞ்சம்: இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விடுத்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர்: ஆக்கிரமப்புகளை அகற்ற, பாதுகாப்பு வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர், மகாராஜன் மகன் மனோகரன். கடந்த 2011ம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர் இது குறித்து மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின் முடிவில் மனோகரனுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த, பிரபாகரன் (64) என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு வழங்குவதற்காக, மனோகரனிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து மனோகரன் கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இந்நிலையில் கடந்த 21.7.2011 அன்று சேத்தியாதோப்பு காவல்நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி பிரபாகரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்தார். வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.5000 லஞ்சம்: இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விடுத்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: