சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மெட்ரோ நிறுவனம் அறிக்கை

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் சென்னை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இப்பணியில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில நாட்கள் தேவைபடுவதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாவும் விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தாயாராகும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை பணிகள் முழுமை அடைந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் எதிரே பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை எளிதாக கடந்து செல்வதற்காக நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கி வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்ப பணிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில நாட்கள் தேவைபடுகிறது. மேலும், மழைநீர் உட்புகாத வகையிலும் மழைநீர் தேங்காத வகையில் அதற்கான வடிகால் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் இறுத் கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை கண்காணிக்க காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஏதேனும் சமூக விரோத செயல், அத்துமீறல், உண்மைக்கு புறம்பான செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த சுரங்கப்பாதை பகுதியில் சமூகவிரோத செயலில் ஈடுபடக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்த உடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

The post சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மெட்ரோ நிறுவனம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: