மின் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்

 

சென்னிமலை, செப்.29: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சென்னிமலை தெற்கு ஒன்றியத்தின் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் யுவராசன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வருகிற பிப்ரவரி 4ம் தேதி பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநாட்டையொட்டி கொங்கு நாடு கலைக்குழு சார்பில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு நடத்தும் வள்ளி, கும்மி நிகழ்ச்சி நடத்துவது.

இதற்காக 1010 நெசவாளர் காலனி மற்றும் சென்னிமலையில் பயிற்சி வகுப்பு நடத்துவது. கட்சியை வலுப்படுத்த கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பொறுப்பாளர்களை நியமிப்பது. அனைத்து பகுதிகளிலும் திண்ணை கூட்டங்கள் நடத்துவது. 2022ம் ஆண்டு உப்பிலிபாளையம் பகுதியில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் மற்றும் கடந்த மாதம் ஒட்டங்குட்டை அருகே உள்ள கரியங்காட்டு தோட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கேட்டு கொள்வது,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் காப்பாற்றும் வகையில் மின் கட்டணத்தை மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அம்மன் பாலு நன்றி கூறினார்.

The post மின் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: