அமெரிக்காவில் மருத்துவ சேவை வழங்குவதில் ரூ.23 கோடி மோசடி: இந்தியர் குற்றவாளி என அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வீட்டு மருத்துவ சேவை நிறுவனமான ஷ்ரிங் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தவர் யோகோஷ் பஞ்சோலி(43). இந்தியரான யோகேஷ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். ஆனால், போலி பெயர்கள், போலி கையெழுத்துகள், தன்னுடைய தனிப்பட்ட விவரங்களை மறைத்து பண மோசடி செய்துள்ளார். வழங்காத மருத்துவ சேவைக்காக யோகேஷ் பஞ்சோலியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.23.3 கோடி மோசடி செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த மிச்சிகன் நீதிமன்றம் யோகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றவாளி என அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் ஜனவரி 10ம் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டில் இருந்து அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

The post அமெரிக்காவில் மருத்துவ சேவை வழங்குவதில் ரூ.23 கோடி மோசடி: இந்தியர் குற்றவாளி என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: