இதனிடையே முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு செப்.23 – அக்.2ம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், 4 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 – அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 1 முதல் 5ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதிக்கு பதிலாக 9ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 கட்டங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக அக்டோபர் 6ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் காலாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அக்.8 வரை காலாண்டு விடுமுறை தொடங்கியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை! appeared first on Dinakaran.
