பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்புக்கு அக்.9 வரை விடுமுறை

பெரம்பலூர்,செப்.28: பெரம்பலூரில் நேற்றோடு (27ம்தேதி) காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததால், இன்று (28ம்தேதி) முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, 1 முதல் 5 வகுப்புகளுக்கு 9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, கடந்த 15ம் தேதி முதல் நேற்று (27ம் தேதி) வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. நேற்றோடு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று (28ம் தேதி) முதல் விடுமுறை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அக் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 முதல் 5 வகுப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அக்டோபர் 9ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

எந்தாண்டும் இல்லாத படி நடப்பாண்டு 28ம் தேதி (மிலாடி நபி) அரசு விடுமுறை நாள், 30 மற்றும் அக். 1 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை நாள் என காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்து, 29ம் தேதி ஒரு நாள் மட்டுமே காலாண்டு தேர்வுக்கான விடுமுறை தினமாக கிடைத்திருப்பது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியரை, ஆசிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்புக்கு அக்.9 வரை விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: