₹3.89 கோடி மதிப்பில் வாய்க்கால் புனரமைப்பு

கெங்கவல்லி, செப்.28: நடுவலூரில் ₹3.89 கோடி மதிப்பில் ஆற்று வாய்க்கால் புரைமைப்பு பணிகள் தொடங்கும் நிலையில், சேலம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, நடுவலூர் கிராமத்தில் ஆற்று வாய்க்கால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். இதை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வலசக்கல்பட்டி பாலம் முதல் நடுவலூர் சித்தேரி வரை வாய்க்கால் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள ₹3.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார். இப்பணிகள் மேற்கொள்ள சேலம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன், ஆற்று வாய்க்கால் புரைமைப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, ஆத்தூர் உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, பொறியாளர் ரத்தினவேல், உதவி பொறியாளர் பழனிசாமி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் விஜேந்திரன் இருந்தனர். இதுகுறித்து நடுவலூர் ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ‘நடுவலூர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை, நல்லதம்பி எம்எல்ஏ மூலம் நிறைவேற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இப்பணிகள் வலசக்கல்பட்டி பாலம் முதல் நடுவலூர் சித்தேரி வரை 4.5 கி.மீட்டர், 550 மீட்டர் கான்கிரீட் தடுப்பு சுவர், ஆற்று வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் கீழ்தளம் அமைத்தல், 200 மீட்டர் கான்கிரீட் தடுப்பணை கட்டுதல், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,’ என்றார்.

The post ₹3.89 கோடி மதிப்பில் வாய்க்கால் புனரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: