கெங்கவல்லி, செப்.28: கெங்கவல்லி பேரூராட்சி 8வது வார்டில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தில் ₹50 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் சாலை அமைக்க கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமையில் பூஜையுடன் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ், கவுன்சிலர்கள் லதா மணிவேல், முருகேசன், தங்கபாண்டியன், ஹாம்சவர்தினி குமார், சத்யா செந்தில், களியம்மாள், மற்றும் நிர்வாகிகள், லக்குமணன் ராஜேந்திரன், அரவிந்தராஜா, செல்வ கிளிண்டன், நவீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சாலை அமைக்கும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.