ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்

சேலம், செப். 28: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வரவேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பின் மண்டல செயலாளர் அன்பழகன், மண்டல தலைவர் பழனிவேலு, சிஐடியூ மாவட்ட செயலாளர் உதயகுமார், மத்திய அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க நிர்வாகி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: