காதலியை சுத்தியலால் தாக்கிய தொழிலாளி கைது

ஓசூர், செப்.28: ஓசூர் மூக்கண்டப்பள்ளி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சோமசேகர்(எ) சோமு(53). கூலி தொழிலாளியான இவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த திருமணமான ஜோதி(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இதனிடையே ஜோதிக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், சோமுவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் பத்தலப்பள்ளி பகுதியில், ஜோதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சோமு வழிமறித்து தகராறு செய்துள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த சுத்தியலால் சரமாரி தாக்கியுள்ளார்.இதில், நிலைகுலைந்த ஜோதிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, சோமு தப்பிச் சென்றார். தாக்குதலில் படுகாயமடைந்த ஜோதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின்பேரில், ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து சோமுவை கைது செய்தனர். விசாரணையில், வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதில், தன்னை தவிர்த்து வந்ததால் ஜோதியை அவர் தாக்கியது தெரியவந்தது.

The post காதலியை சுத்தியலால் தாக்கிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: