காதலை ஏற்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் தேடுகின்றனர். மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ராஜ்குமார் (23) தனது பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை, ஒருதலைபட்சமாக காதலித்துள்ளார். அந்த பெண் இவரது காதலை ஏற்காததால், ஏற்கனவே அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ராஜ்குமார் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று அதிகாலை ராஜ்குமார், அந்த பெண்ணின் வீட்டு வாசல் மற்றும் ஜன்னல் பகுதிகளில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். இதில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் சேதமடைந்துள்ளது. பெண்ணின் தாயார் புகாரின்படி, திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

The post காதலை ஏற்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: