காவிரியில் நீர் திறக்க மறுத்து பிடிவாதம்!: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு..!!

பெங்களூரு: காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாட உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிந்து காவிரி ஆணையம் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து நேற்று 87வது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்ட ஆலோசனை நடைபெற்றது. அச்சமயம், நீர் திறப்பதற்காக தங்களிடம் எந்தவொரு நீரும் இல்லை. பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நீர் திறப்பதற்கான உத்தரவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனால் அதற்கு, காவிரி ஒழுங்காற்று குழு மறுப்பு தெரிவித்து, காவிரியில் நாளை முதல் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணை பிறப்பித்தது. அடுத்த மாதம் 15ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு நேற்று உத்தரவிட்டது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார்.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் சித்தராமையா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கிடையே காவிரி, மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் விரைவில் நடைபெறும் எனவும், அந்த கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவுகளையும் கர்நாடக அரசுக்கு, ஒன்றிய அரசு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

The post காவிரியில் நீர் திறக்க மறுத்து பிடிவாதம்!: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: