புரட்டாசி மாத வழிபாட்டின் சிறப்புகளும் அதனால் உண்டாகும் நன்மைகளும்..!!

தமிழ் மாதங்களில் பெருமாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதம் புரட்டாசி ஆகும். புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்ததை நடத்தி தருவார் என்பது நம்பிக்கை.

புரட்டாசி மாதத்தில் தான் சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடிய பிதுர் கடனை தீர்க்கும் மாதமாக புரட்டாசி மாதம் விளங்குகிறது.இந்த மாதத்தில் வரும் அம்மாவசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஏன் இந்த மாதத்தில் வரும் அம்மாவசை சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது என்றால் சூரியன் கன்னி ராசிக்குள் வந்ததும் எமதர்மன் பிதுர் லோகத்தில் வசிக்கும் முன்னோர்களை அவரவர் உறவுகளை நாடி செல்லும்படி உத்தரவிடுகிறார். புரட்டாசி வளர்பிறை நாளில் இருந்து அம்மாவசை வரையிலான 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

புரட்டாசி மாதம் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் காலையில் எழுந்து வீட்டை சுத்தபடுத்தி மாகோலமிட்டு சுத்தமான ஆடை அணிந்து உடல் தூய்மையோடும் ,உள்ள தூய்மையோடும் பூஜை அறையில் விளக்கேற்றி பெருமாளை வழிபட வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏன் என்றால் பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசியாகும்.எனவே துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல்,கேசரி ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை நெய்வேதியமாக வைக்க வேண்டும்.

நாராயணின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து ‘ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.

The post புரட்டாசி மாத வழிபாட்டின் சிறப்புகளும் அதனால் உண்டாகும் நன்மைகளும்..!! appeared first on Dinakaran.

Related Stories: