16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை

சங்ககிரி, செப்.27: சேலம் அருகே, 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பனமரத்துபட்டி தாலுகா, சீலநாயக்கன்பட்டி கிராமம், ஊத்துமலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த கண்ணையன், பாப்பாத்தி. இவர்களது மகன் மணி (21), கூலி தொழிலாளி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ம் தேதி கொங்கணாபுரம் அருகே சின்னப்பம்பட்டி எல்லனூரில் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளதாக சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழியின் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் அருள்மொழி அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்ஐ சாரதா ஆகியோர் 16 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை appeared first on Dinakaran.

Related Stories: