ராணுவ கல்லூரியில் சேர அழைப்பு

கிருஷ்ணகிரி, செப்.27: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய ராணுவ கல்லூரியில் சேர, அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியில், 2024ம் ஆண்டு ஜூலை பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தகுதித்தேர்வு, வருகிற டிசம்பர் 2ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய அமர்விற்கான வினாத்தாள் தொகுப்பை, ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியின் இணையதளம் மூலமாக பொதுப்பிரிவினர்கள் ₹600ம், எஸ்பி., எஸ்டி பிரிவினர் ₹555ம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 2.7.2011க்கு முன்னதாகவும், 1.1.2013ம் தேதிக்கு பிறகும் பிறந்திருக்கக் கூடாது.

ராணுவ கல்லூரியில் அனுமதிக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவும், அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு, வருகிற அக்டோபர் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றுசேர வேண்டும். தகுதியும் விருப்பபமுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ராணுவ கல்லூரியில் சேர அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: