ஈரோட்டில் செப்.30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 

ஈரோடு, செப். 27: தனியார் துறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 30ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 30ம் தேதி ஈரோடு ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமை வீட்டு வசதித்துறை அமைச்சர் அமைச்சர் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post ஈரோட்டில் செப்.30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: