பாஜவுடனான கூட்டணி முறிவு அதிமுகவினர் கொண்டாட்டம்

திருவள்ளூர்: அதிமுக தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வந்த பாஜ தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைப்பு செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக, பாஜ கூட்டணி முறிந்ததாக முறைப்படி அறிவித்தார். இதனை, அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, திருவள்ளூர் ஒன்றிய அதிமுக செயலாளர் புட்லூர் சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் காக்களூரில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி்யும் கொண்டாடினர். அப்போது பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜீவாசுப்பிரமணி, நிர்வாகிகள் தொழுவூர் சந்திரன், இளையான் (எ) மோகனசுந்தரம், பாலச்சந்தர், ஜெய்சங்கர், வேப்பம்பட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஷ், முருகதாஸ், ரகுபதி, ரவிச்சந்திரன், உதயகுமார், மனோகர், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாஜவுடனான கூட்டணி முறிவு அதிமுகவினர் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: