நெல்லையப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயில் உண்டியலில் 2 ஆயிரம் நோட்டுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக ஆய்வு எண்ணும் பணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி விழாக்காலங்கள் நிறைவு பெற்ற பிறகும், 3 மாதங்களுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த பணியில் ரூ.16 லட்சத்திற்கும் மேலாக காணிக்கை உள்ளதை கணக்கிடப்பட்டு அதனை அதிகாரிகளின் மேற்பார்வையில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கால அவகாசம் வரும் 30ம் தேதியுடன் முடிவடையக்கூடிய நிலையில் நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

மொத்தமாக 21 நிரந்தர உண்டியல்கள் இருக்கும் நிலையில் கோவிலின் செயல் அலுவலர் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றுள்ளனர்.

The post நெல்லையப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: