மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமா ?… பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தல்

சென்னை : பொதுவெளியில் பாஜக குறித்து எந்த கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் என மாவட்ட செலயாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதர கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முடிவெடுக்கும் வரை நிர்வாகிகள் அமைதி காக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக அவதூறு பேச்சு, நக்கல், கிண்டல், கேலி என்று அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளபோதும் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி முறிந்த பொதும் பாஜக பற்றி கடும் விமர்சனங்களை முன்வைக்க அதிமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பாஜக தரப்பிலும் அதிமுக மீது கடும் விமர்சனங்களை வைக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பாஜக மேலிட அறிவுறுத்தல் காரணமாகவே அக்கட்சியின் நிர்வாகிகள் அதிமுகவை விமர்சிப்பதை தவிர்த்து வருகின்றனர்.வழக்கமாக அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாமலை கூட்டணி முறிவுக்கு பின் விமர்சனம் முன்வைக்கவில்லை. கூட்டணி பற்றி தேசிய தலைமையே முடிவெடுக்கும் என்று மட்டும் அண்ணாமலை கூறி உள்ளார்.கூட்டணி முறிவை அதிமுக அறிவித்ததும் வாழ்த்துக்கள் மீண்டும் வராதீர்கள் என பதிவிட்டதை அமர்பிரசாத் ரெட்டி நீக்கினார்.வாழ்த்துக்கள் மீண்டும் வராதீர்கள் என்ற பதிவுக்காக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மன்னிப்பு கேட்டார்.மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வரும் என பாஜக மூத்த தலைவர்கள் சிலர் நம்புகின்றனர்.மீண்டும் கூட்டணி உருவாகலாம் என்பதன் காரணமாகவே அதிமுகவின் முடிவு குறித்து பாஜகவினர் விமர்சிக்காமல் உள்ளனர்.

The post மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமா ?… பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: