சில்லி கடைக்காரரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது

சேலம், செப்.26: சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால்(60). இவர் சண்முகாநகர் சந்திப்பில் காலிபிளவர் சில்லி கடை வைத்துள்ளார். கடந்த 23ம் தேதி, இவரது கடைக்கு வந்த 4பேர் காலிபிளவர் சில்லி வாங்கி சாப்பிட்டு பணம் கேட்டபோது, கொடுக்க மறுத்து, 4 பேரும் ேசர்ந்து ராஜகோபாலை தாக்கி கத்தியால் மிரட்டி, கல்லாவில் வைத்திருந்த ₹2,700ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதுபற்றி ராஜகோபால் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராஜகோபாலை தாக்கியது சண்முகா நகரை சேர்ந்த தாமு என்கிற தாமோதரன்(22), தினேஷ்குமார்(20), ராகுல்(20), சுரேந்தர்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சில்லி கடைக்காரரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: