திருவள்ளூர் அடுத்த சென்னாவரத்தில் 2 கோயில்களில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சென்னாவரத்தில் 2 கோயில்களில் அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமன் கோயில் ஊராட்சி, சென்னாவரம் பகுதியில் ஸ்ரீ லிங்கேஸ்வரர் கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த 2 கோயில்களிலும் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கோயில்களை பூட்டிவிட்டுச் சென்றனர்.

நேற்று முன்தினம் (ஞாயிறு) காலை மீண்டும் திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கோயில் நிர்வாகி நடராஜன் (59) அதிர்ச்சி அடைந்தார். 2 கோயில்களுக்குள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 16 கிராம் தங்கம் மற்றும், பர்வத வர்த்தினி அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்கம் தங்கத் தாலி மற்றும் உண்டியல் காணிக்கை ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் கடம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயில்களின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அடுத்த சென்னாவரத்தில் 2 கோயில்களில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: