திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

பூந்தமல்லி: திருவேற்காட்டில் அரசு பள்ளிக்கு ரூ.2.11 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு சா.மு.நாசர் எம்எல்ஏ நேற்று அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டுமென, பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 10 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான நிதி சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்ததாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் மூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பார்த்தசாரதி, கவுன்சிலர்கள் ஏ.ஜெ.பவுல், தெய்வசிகாமணி, சரவணன், நடராஜ், பிரதானம், சுதாகர், பிரியாகுமார், விநாயகம், ஜேக்கப், ராஜி, பாபு, நரேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் பரந்தாமன், தலைமை ஆசிரியர் அனிதா, உதவி தலைமை ஆசிரியர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: