புகைப்படத்தை மாப்பிங் செய்து பரப்புவதாக மிரட்டி மாணவியிடம் 13 சவரன் பறிப்பு: வாலிபருக்கு வலை

தண்டையார்பேட்டை: புகைப்படத்தை மாப்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டி மாணவியிடம் 13 சவரன் பறித்த வாலிபரை போலீ சார் தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர், தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் மாதவரம் தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த சந்திப் சோலாங்கி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சோலாங்கி உணவகம் நடத்தி வருகிறார்.

இருவரும் நெருக்கமாக பழகி வந்த காரணத்தால் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவருடைய புகைப்படங்களை வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து மாப்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மாணவியை மிரட்டி, அவரிடம் இருந்து சிறுக, சிறுக கடந்த இரண்டு மாதங்களாக 13 சவரன் நகைகளை பறித்துள்ளார். மேலும், மாணவியை மிரட்டி வந்ததால், மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையிடம் இது பற்றி கூறியுள்ளார். உடனே, இதுகுறித்து தந்தை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், சந்திப் சோலாங்கியை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

The post புகைப்படத்தை மாப்பிங் செய்து பரப்புவதாக மிரட்டி மாணவியிடம் 13 சவரன் பறிப்பு: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: