அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடி கொன்ற 13 அடி நீள ராட்சத முதலை..!!

அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலையை புளோரிடா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணமான புளோரிடா தலைநகரமான டல்லஹாசீயின் பினாலஸ் கவுன்டி பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் அருகே 13 அடி நீள முதலை ஒன்று தென்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு மனித உடலின் பாகங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள் 13 அடி நீள ஆண் முதலையை சுட்டிக் கொன்று, அதன் வாயில் இருந்த மனித உடலை மீட்டனர்.

The post அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடி கொன்ற 13 அடி நீள ராட்சத முதலை..!! appeared first on Dinakaran.

Related Stories: