தொட்டியம் அருகே கொளக்குடியில் 8 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

தொட்டியம், செப்.25: தொட்டியம் அருகே கொளக்குடியில் 8 விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கொளக்கொடி, அப்பண்ணநல்லூர் ஆகிய ஊர்களில் விநாயகர்சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொளகுடி பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்து கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இந்நிலையில்ம நேற்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எட்டு விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் அனைத்து விநாயகர் சிலைகளும் கொளக்குடி கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஈங்கோய்மலை பகுதியில் காவிரி ஆற்றில் எட்டு விநாயகர் சிலைகளும் கரைக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.பி., வருண் குமார், 2 ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 567 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் முசிறி வருவாய் கோட்டாட்சியர், தொட்டியம் வட்டாட்சியர் உள்பட அனைத்து வருவாய்த்துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post தொட்டியம் அருகே கொளக்குடியில் 8 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் appeared first on Dinakaran.

Related Stories: