வங்கியில் கொள்ளையடிக்க சுவரில் துளையிட்ட கும்பல்

சேலம், செப்.25: கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டி சந்தைபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் வங்கியின் பின்புற பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றார். அப்போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனே வங்கி மேலாளருக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வங்கி சுவரில் துளையிட்ட இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

துளையிடப்பட்ட இடத்திலிருந்து உள்ளே சென்றால் வங்கி லாக்கர் இருக்கும் அறைக்குள் புகமுடியும். இதையடுத்து வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக பின்புறம் மர்மநபர்கள் துளையிட்டுள்ளனர் என்பது உறுதியானது. நேற்று வங்கி விடுமுறை என்பதால் யாரும் வங்கியில் இருக்க மாட்டார்கள் என்பதை பயன்படுத்தி உள்ளே புகுந்து கொள்ளையடிக்கலாம் என திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post வங்கியில் கொள்ளையடிக்க சுவரில் துளையிட்ட கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: