அரவக்குறிச்சி,செப்.25: அரவக்குறிச்சி அருகே புத்தாம்பூரில் இலவச கண் மருத்து முகாம் நடைபெற்றது.
161 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, லீடர்ஸ் பொது நல அமைப்பு இணைந்த நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் புத்தாம்பூரில் வள்ளுவர் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பபு கண் மருத்துவர் சாந்தாஜார்ஜ் தலைமையில் 17 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். இலவச கண் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 62 பேர் உள்ளிட்ட 161 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
The post புத்தாம்பூரில் இலவச கண் மருத்துவமுகாம் appeared first on Dinakaran.