தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: ஒன்றிய இணை அமைச்சர் தகவல்

நெல்லை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: நெல்லையில் இருந்து சென்னை செல்ல முன்பெல்லாம் ஒரு நாள் ஆகிவிடும். அந்த நிலை இப்போது மாறியுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரசில் 8 மணி நேரத்தில் சென்னைக்கு பயணிக்கலாம்.

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 2009 முதல் 2014 வரை ரயில்வே துறையில் தமிழகத்திற்கு #$800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு #$6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ராமேஸ்வரம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை ரயில் நிலையங்களை சீரமைப்பதற்காக ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.’’ என்றார்.

The post தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: ஒன்றிய இணை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: