பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் 29ம் தேதி சிறப்பு கூட்டம்

 

ஈரோடு, செப். 25: ஈரோடு பெரியார் மன்றத்தில் பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் வரும் 29ம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு, வைக்கம் போராட்டம் நூற்றாண்டு தினம், சேரன் மாதேவி குருகுலம் ஒழிப்பு நூற்றாண்டு ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திர பிரபு தலைமை தாங்குகிறார். பொருளாளர் கனிமொழி நடராசன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டத்தை திரை நட்சத்திரம் ஈரோடு பிரியா தொகுத்து வழங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக திமுக.வின் தலைமைக்கழக பேச்சாளர் கலைமாமணி கவிஞர் நாகை.நாகராசன் பங்கேற்று பேசுகிறார். புரவலர்களாக பேராசிரியர் காளிமுத்து, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். கூட்ட ஏற்பாட்டினை பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர்.

The post பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் 29ம் தேதி சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: