திருத்தணி, செப்.25: திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ஐசியூ வார்டு, இசிஜி, எக்கோ, ட்ரெட்மில் மற்றும் இதயத்திற்கான கேத் லேப் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கருத்தரிப்பு மையம் திருத்தணி, சோளிங்கரில் இயங்கி வருகிறது. இந்தநிலையில், திருத்தணி மருத்துவமனையில் உலகத் தரத்துடன் கூடிய இதய அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் தொடங்கப்பட்டன. இந்த விழாவுக்கு பீகாக் மருத்துவமனை நிறுவனர் ஸ்ரீ கிரண் தலைமை வகித்தார். மகப்பேறு மருத்துவர் அனுபமா கிரண் அனைவரையும் வரவேற்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை பிரிவு ஓய்வுப்பெற்ற மருத்துவர் ரகுராமன், டாக்டர்கள் சுயம்புலிங்கம், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் வீரராகவராவ் கலந்து கொண்டு மருத்துவமனைக்கு தேசிய அங்கீகாரம் பெற்ற புல் என் ஏபிஎச் சான்றிதழை டாக்டர்கள் கிரண், அனுபமா கிரண் ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஓய்வுப்பெற்ற காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, டாக்டர் பிரகாஷ், லாலு ஜோசப், முன்னாள் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், திருத்தணி வட்டாட்சியர் மதன், சுதந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரங்கநாதன், டிஆர்எஸ் குளோபல் நிறுவனர் சுப்பிரமணியம், வழக்கறிஞர் மோகன்ராம், மாவட்ட திமுக பொருளாளர் மிதுன்சக்கரவர்த்தி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இ.என்.கண்டிகை ரவி, டி.டி. சீனிவாசன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post பீகாக் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவு appeared first on Dinakaran.