திருவள்ளூர், செப். 25: ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஜெல்ஐஸ்சில் லெமன் ஜூஸ் கலந்து குடித்தததால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி தமிழ் காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் எலுமிச்சை பழங்களைப் பறித்து, அதனைப் பிழிந்து, அதனுடன் ஒத்தடம் கொடுக்க பயன்படும் சிலிக்கான் ஜெல்ஐஸ் சேர்த்து ஜூஸ் தயாரித்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தவறுதலான ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்ததையடுத்து, சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அங்கு வர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சிறுவர்களுக்கு அவர் சத்தான பழங்களை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 13 பேரும் தற்போது நலமாக உள்ளனர். ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தப்படும் ஐஸ் கியூப்பை கலந்து குடித்ததால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரத்தவங்கி 15 நாட்களில் செயல்பட தொடங்கும். பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி பயன்பாட்டில் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
The post ஜூஸ் குடித்து வாந்தி,மயக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு: சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் appeared first on Dinakaran.