சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை காக்க மின்கட்டணத்தை குறைக்க அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள அரசு, அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை உணர வேண்டும்.

மராட்டியம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்சார மானியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மின் கட்டணத்தை நேரடியாக, மறைமுகமாக உயர்த்துவது நியாயமல்ல. இதுதொடர்பாக தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டாலும் கூட பயனில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் அவற்றின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும். மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நிறைவேற்ற வேண்டும்.

The post சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை காக்க மின்கட்டணத்தை குறைக்க அரசுக்கு அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: