25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

கோவை: கோவை வெள்ளலூர் காந்திநகரை சேர்ந்தவர் தங்கவேல் (70). இவரது மனைவி கடந்த ஓராண்டிற்கு முன்பு இறந்துவிட்டார். தனியாக வசித்து வந்த தங்கவேல் வீட்டில் வெள்ளலூரை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி மகேஷ்வரி (37) வேலை பார்த்து வந்துள்ளார். மகேஷ்வரி கடந்த சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதையடுத்து தங்கவேல்3 நாள் முன்பு வீட்டை சுத்தம் செய்தபோது வீட்டு பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 25 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேல் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், தங்கவேல் வீட்டில் அவர் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை திருடிச் சென்றது மகேஷ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேஷ்வரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டது.

The post 25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: