விவசாய பூமியை விற்ற மகன் மனம் உடைந்த தந்தை தற்கொலை

 

அந்தியூர், செப்.24: அந்தியூர் பர்கூர் மலைப்பகுதி கல்வாரை அரபுலி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவர், எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். லாரி ஓட்டுனரான இவர் கடந்த 20ம் தேதி தனது மகளை பார்த்து வருவதற்காக பர்கூர் மலைப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மூன்று நாட்களாக பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், நேற்று கோவிலூர் புதுக்காட்டிற்கு மேலே உள்ள வரட்டுமலை வனப்பகுதியில் தூக்கு மாட்டி அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகன் தங்களது விவசாய பூமியை விற்றதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விவசாய பூமியை விற்ற மகன் மனம் உடைந்த தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: