ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

ஓசூர், செப்.24: ஓசூர் எப்ஏ அகாடமியில் ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் நீலகண்டன் தலைமை வகித்தார். உபதலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். இதில் ஓசூர் ரயில்வே தரை பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அதை சரி செய்வது சம்மந்தமாக அனைத்து அமைப்புகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மாமன்ற உறுப்பினர், மேயர், எம்எல்ஏ மற்றும் சப்-கலெக்டர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உபதலைவர் முருகன் நன்றி கூறினார்.

The post ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: