அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியிடம் தமிழ்நாடு மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க நடவடிக்கை: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 35க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர். இவற்றில் 85%இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு மூலமாகவும், 15%இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு மூன்று கலந்தாய்வுகள் முடிந்த பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 483 மருத்துவ இருக்கைகள் காலியாக உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

எனவே, முதல்வர் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இருக்கைகளையும் திரும்ப பெற்று அதனை தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகளை கொண்டு நிரப்பவும், எதிர்காலத்தில் ஒன்றிய, மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை ஒரே சமயத்தில் நடத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியிடம் தமிழ்நாடு மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க நடவடிக்கை: ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: