தொடக்கக்கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரோகிணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறேன். அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்கினால்தான் ஊதியம் வழங்கப்படும் என்பதால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் வழங்காததால் 2019ல் ஐகோர்ட் கிளையில் மனு செய்தேன்.

பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க அப்போதே நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் 4 வருடங்கள் தாமதமாக பதிலளித்த தொடக்கக்கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை வக்கீல்கள் நல நிதியில், 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post தொடக்கக்கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: