சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: கேரள வாலிபர் சென்னையில் கைது


திருவனந்தபுரம்: கேரளாவில் பிஸ்கெட் தருவதாக கூறி ஏமாற்றி சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் சென்னையில் கைது செய்தனர். கேரள மாநிலம் மூணாறு அருவிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (27). ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இரவில் வெளியே சுற்றித்திரிந்த ரஞ்சித் அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.அப்போது அங்கு மூதாட்டி ஒருவரும், 7 வயது சிறுமியும் இருந்துள்ளனர். நைசாக உள்ளே நுழைந்த ரஞ்சித் அந்த சிறுமியிடம் உனக்கு பிஸ்கெட் தருகிறேன். என்னுடன் வா… என்றுள்ளார். இதையடுத்து சிறுமியை அலேக்காக தூக்கிச்சென்றுவிட்டார்.

ஆனால் தனது பேத்தியை ரஞ்சித் தூக்கி செல்வதை மூதாட்டி கவனிக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியை தூக்கிச்சென்ற ரஞ்சித் அங்குள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதைக்கேட்டதும் சிறுமியின் பாட்டி அங்கு விரைந்து சென்றார். மூதாட்டி வருவதை கண்டதும் ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து தேவிகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை தேடி வந்தனர். இதற்கிடையே ரஞ்சித் சென்னைக்கு சென்று தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று, தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

The post சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: கேரள வாலிபர் சென்னையில் கைது appeared first on Dinakaran.

Related Stories: