திண்டிவனத்தில் பிரபல பைக் ஷோரூமை உடைத்து ₹2 லட்சத்து 81 ஆயிரம் திருட்டு

*முகமூடி ஆசாமிக்கு வலை

திண்டிவனம் : திண்டிவனம் செஞ்சி சாலையில் ஹீராசந்த் மகன் பப்புளாசா(55) என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. இந்த ஷோரூமில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு, பூட்டி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை வந்து ஷோரூமை திறந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அலுவலகத்தில் இருந்த டேபிள் லாக்கரை உடைத்து அதிலிருந்த 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த ரோசணை போலீசார், திருட்டு சம்பவம் நடைபெற்ற ஷோரூம் முழுவதும் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் ஷோரூமில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டை, கை கிளவுஸ், வெள்ளை நிற மங்கி குல்லா மற்றும் முகமூடி அணிந்தபடி கையில் இரும்பு ராடுடன் பின் பக்க ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அலுவலக டேபிள் லாக்கரை உடைத்து அதிலிருந்த 2 லட்சத்து 81 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து, முகமூடி ஆசாமியை தேடி வருகின்றனர்.

The post திண்டிவனத்தில் பிரபல பைக் ஷோரூமை உடைத்து ₹2 லட்சத்து 81 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: