சென்னிமலை பகுதியில் ஓட்டல்களில் அதிகாரிகள் ரெய்டு

 

சென்னிமலை, செப்.23: சென்னிமலை மற்றும் வெள்ளோடு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை வெள்ளோட்டில் உள்ள ஓட்டல்களில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் துரித உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தலைமையில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஷவர்மா கடைகளில் மசாலா தடவிய பழைய சிக்கன் 1 கிலோ குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. செயற்கை கலர் பவுடர் கலந்து தயாரித்த சில்லி சிக்கன் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

சில்லி சிக்கனுக்கு கலர் பொடிகள், அஜினா மோட்டா ஆகியவை பயன்படுத்தக்கூடாது என்றும் தடை செய்யப்பட்ட கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தக்கூடாது என்றும் சூடான சாம்பார், ரசம் மற்றும் டீ, காபி போன்ற சூடான உணவு பொருள்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்து கொடுக்கக்கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் சிக்கன் எப்போது வாங்கப்பட்டது? என்பதற்கான பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செயற்கை கலர் பவுடர் பயன்படுத்தி சிக்கன் சில்லி தயாரித்த 2 கடைகளுக்கும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கும், பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை தாள்களில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கிய 2 கடைகளுக்கு தலா 1000 வீதம் என மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post சென்னிமலை பகுதியில் ஓட்டல்களில் அதிகாரிகள் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: