பாடாலூர், செப்.23: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் காவல் நிலையத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தை நடத்த உதவிய அனைத்து நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி ‘‘தேநீர் விருந்து நிகழ்ச்சி’’ நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் காவல் நிலையத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்த விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வல நிகழ்ச்சிகளில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமில்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, இரவு பகல் பாராமல் மிக சிறப்பாக பணியாற்றிய அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கெளரவிக்கும் விதமாக போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டார். அதன்படி, பாடாலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி எவ்வித வித்தியாசமின்றி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.ஐ.,க்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பாடாலூர் காவல் நிலையத்தில் தேநீர் விருந்து நிகழ்ச்சி appeared first on Dinakaran.
