புதுவை பாஜ பிரமுகர் கொலை 13 பேர் மீது 1710 பக்க குற்றப்பத்திரிகை: நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல்

புதுச்சேரி: புதுவை பாஜ பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கு தொடர்பாக 13 பேர் மீது 1710 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த பாஜ பிரமுகர் செந்தில்குமார் கடந்த மார்ச் மாதம் வெடிகுண்டு வீசி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராமநாதன் உட்பட 13 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வழக்கை கடந்த மாதம் ஏப்ரல் 29ம் தேதி என்ஐஏ கையில் எடுத்து, வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியது. விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் 13 பேர் மீது 1,710 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளனர். இதில் ராமநாதனைத் தவிர மற்ற அனைவரின் மீதும் ஐபிசி ஆயுதச் சட்டம், வெடிபொருள் சட்டம் மற்றும் யுஏ (பி) சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post புதுவை பாஜ பிரமுகர் கொலை 13 பேர் மீது 1710 பக்க குற்றப்பத்திரிகை: நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: