சேலம், செப்.22: சேலத்தில் 16 வயது சிறுமி 9 மாத கர்ப்பமான நிலையில், வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ேலம் வீராணம் பக்கமுள்ள சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(23). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான அந்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறுமியின் வயதுக்கான ஆவணங்களை சரிபார்த்த போது, அவருக்கு 16 வயது என்பது உறுதியானது. இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு 20 வயது என கூறி அனைவரையும் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அஜித் மீது, போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 16 வயது சிறுமி 9 மாத கர்ப்பம் appeared first on Dinakaran.