நெரூர் காளிபாளையம் பகுதியில் சோளப்பயிர் அறுவடைக்கு தயார்

கரூர், செப். 21: கருர் மாவட்டம் நெரூர் காளிபாளையம் பகுதியில் விளைந்துள்ள சோளப் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பாசனமும், மற்றொரு புறம் ஏரி, குளம் மற்றும் வானம் பார்த்த பூமி பாசனம் என்ற அடிப்படையில் விவசாயிகள் பாசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட தவிட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி, நெருர், வாங்கல், மாயனூர், குளித்தலை ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனமும், செட்டிப்பாளையம், கொத்தம்பாளையம், புலியூர், மேலப்பாளையம், கோயம்பள்ளி போன்ற பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனத்திலும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதிகளில் நெல், சோளம், மரவள்ளிக் கிழங்கு, கோரைப்பயிர் உட்பட அனைத்து வகையிலும் பாசனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நெரூர், காளிபாளையம் போன்ற பகுதிகளில் நுற்றுக்கணக்கான விவசாயிகள் சோளம் பயிரிடப்பட்டுள்ளனர். காளிபாளையம் பகுதிகளில் விளைந்த சோளப் பயிர்கள் தற்போது வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே, இந்த அறுவடை செய்வதற்கான பணிகளை இந்த பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நெரூர் காளிபாளையம் பகுதியில் சோளப்பயிர் அறுவடைக்கு தயார் appeared first on Dinakaran.

Related Stories: