38ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பிரசாரம்

 

திருவள்ளூர்: ரயில்வே பாதுகாப்பு படையின் 38ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் அரசு நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி துணை ஆணையர் சின்னதுரை ஆகியோர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படையின் 38ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் திருவள்ளூர், பெரியகுப்பம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ஜெபாஸ்டியன், துணை உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசலு, ரவி ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். ரயிலில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு, பள்ளி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ரயில்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post 38ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: