இந்நிலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரியை அந்நாடு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் கனடா மூத்த தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசும் உத்தரவிட்டுள்ளது. ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான ‘விசா’ சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்குமாறு விசா சேவை மையங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
The post தீவிரமடையும் மோதல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா appeared first on Dinakaran.