நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். முதுநிலை நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து மருத்துவ கவுன்சிலிங் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டுக்கான முதுநிலை படிப்பிற்குரிய கட்-ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. இது அனைத்து வகைகளிலும் பொருந்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக்கொண்டதுZERO மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பின் மூலம், நீட் தேர்வு அர்த்தமற்றது என அவர்களே ஒப்புக்கொண்டனர்; இது பயிற்சி மையம் மற்றும் கட்டணத்திற்கான சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல் இல்லை.விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியும் மனம் தளராத ஒன்றிய அரசு, தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; நீட் என்ற ஆயுதத்தால் பல உயிர்களை கொன்ற பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: