அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்திப்பு: எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வாழ் இஸ்ரேலியர்கள் நியூயார்க் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் பேச்சு வாரத்தை நடத்தினார்கள். அப்போது ஹோட்டலுக்கு வெளியே குவிந்த அமெரிக்க வாழ் இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் நேதன்யாகுவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்ரேல் நீதித்துறையின் அதிகாரங்களை நீர்த்து போக செய்து அதன்மூலம் சர்வாதிகார ஆட்சியை நிறுவ நேதன்யாகு முயற்சிக்கிறார் என்பது ஆர்ப்பாட்டகாரர்களின் குற்றச்சாட்டாகும். இதற்கு ஜோ பைடன் துணை போக கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர். நீதித்துறையின் அதிகாரங்களை ஆட்சியாளர்களுக்கு மடைமாற்றம் செய்யும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் உள்ளது. அதை எதிர்த்து இஸ்ரேலில் பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சவூதி அரேபியாவுடன் சுற்றுலா, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இஸ்ரேல் செய்ய உள்ள ஒப்பந்தத்திற்கு ஆதரவு கேட்க பைடனை நேதன்யாகு சந்தித்தாக கூறப்படுகிறது. மறுபுறத்தில் நேதன்யாகுவுக்கு எதிராக குவிந்த இஸ்ரேலியர்கள் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். வலதுசாரியா நேதன்யாகுவுக்கு பைடன் ஆதரவு அளிக்கக்கூடாது என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

The post அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்திப்பு: எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: