ஈரோடு, செப். 21: ஈரோட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 அடி விநாயகர் சிலைக்கு 2 லட்சம் ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 17ம் தேதி 5 அடி உயர சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை விநாயகருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விநாயகரின் பூஜை தட்டில் ரூ.50 ஆயிரம் (500 ரூபாய் நோட்டு கட்டு) வைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் விநாயகரை ஆர்வமுடன் வந்து வழிபட்டு சென்றனர். அலங்காரம் கலைக்கப்பட்டதும், அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.
The post இந்த நாள் விநாயகர் சிலைக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் appeared first on Dinakaran.