சென்னை: பாஜ சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலை அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுகிறார். ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, ஏ.ஜி.சம்பத், மாநில பொது செயலாளர்கள் இராம.நிவாசன், பொன்.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்.
மாநில செயலாளர்கள் மீனாட்சி நித்ய சுந்தர், ஏ.அஸ்வதாமன், எஸ்.ஜி.சூர்யா, மாநில செய்தி தொடர்பாளர்கள் சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன், எஸ்.ஆதவன், காந்த் கருனேஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, சமூக ஊடக பிரிவு மாநில பார்வையாளர் ஆர்.ஏ.அர்ஜூன மூர்த்தி, விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி, சிந்தனையாளர் பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதரன், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஏ.குமரகுரு, மகளிர் அணி மாநில பொது செயலாளர் டாக்டர் மோகனபிரியா சரவணன் ஆகியோர் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஊடக விவாதங்களில் பங்கேற்கும் பாஜ நிர்வாகிகள் பட்டியல்: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.